Header Ads

  • BREAKING



    சென்னை மெரினா கடலில் இறங்கி இளைஞர்கள் திடீர் போராட்டம்.

    மெரினா கடற்கரையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் நேற்று முதலே அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்பி, போராட்டத்தில் பங்கேற்க வந்த 27 இளைஞர்களை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் இளைஞர்கள் சுமார் 15 பேர் கூடினர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்ற பதாகைகளுடன் போராட்டத்தை தொடங்கினர். அதற்குள் அங்கு வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்யத் தொடங்கினர். அப்போது இளைஞர்கள் சிலர் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
    கடலுக்குள் இறங்கிய போலீசார் ஒவ்வொருவராக கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் ஐந்து பேர் மட்டும் சற்று தொலைவாக சென்றதால் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. இதனால் போலீசார் ஐந்து பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பேரை லாவகமாக சுற்றி வளைத்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad