Header Ads

  • BREAKING



    ஓபிஎஸ் அணிக்கு கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு.

    கோவைமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் அணியின் பலம் 12-ஆக உயர்ந்ள்ளது.

    தனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வீடு திரும்பியதாகவும் பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான் கட்சியில் இல்லை என்றும் ஓபிஎஸ், தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்று அருண்குமார் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து, பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad