Header Ads

  • சற்று முன்



    விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள்: காவல் ஆணையர் கரண் சின்ஹா.

    சென்னையில் சாலையோரமாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை ஆக்கிரமித்து இடையூறாக நிற்கும் வாகனங்களை அகற்றுமாறு மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள கரன் சின்ஹா, மாநகரின் போக்குவரத்து பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதற்கான பணிகளை காவல்துறை ஆணையர் முடுக்கி விட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுப்பேற்ற மறுநாளே போக்குவரத்து காவல் அதிகாரிகள் முதல் ஆய்வாளர்களை வரை அனைவரையும் வரவழைத்து, “போக்குவரத்து சிக்கலுக்கு காரணங்கள் என்ன? அதற்கான தீர்வு என்ன?” என்பதைக் கேட்டறிந்து, சில வழிமுறைகளை சொல்லி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
    Peak Hours எனப்படும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணிமுதல் 6 மணி வரையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவதில் போலீசார் காட்டும் மெத்தனம் காரணமாக சாலைகளில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், அவசர வேலையாக வெளியே செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மாதக்கணக்கில் சாலையோரமாகக் கிடக்கும் வாகனங்கள், சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்தையும் பாதிக்கச் செய்கின்றன.
    ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆணையரே சிக்கிக்கொள்ள, ஓப்பன் மைக்கில் அதிகாரிகளிடம் அவர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அகற்ற போக்குவரத்து போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஈடுபடுமாறு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி சாலையோரங்களை ஆக்கிரமிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமானவைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வு தேடினால், சிக்கலில்லா போக்குவரத்து சென்னையில் விரைவில் சாத்தியமாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad