ஊழல் புகாரில் சிக்கி பதவியிழந்த தென்கொரிய முன்னாள் அதிபர் கைது.
ஊழல் புகாரில் சிக்கி பதவியிழந்த தென்கொரிய முன்னாள் பெண் அதிபர் பார்க் ஜியூன்-ஹை இன்று கைது செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்கொரியாவின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்ற பார்க் ஜியூன்-ஹை (Park Geun-hye), பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்று அதிபர் பார்க் ஜியூன்-ஹை மறுத்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பார்க் ஜியூன்-ஹை-யை அதிபர் பதவியிலிருந்து நீக்கிய தென்கொரிய அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம், புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை