ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி மீது வழக்குப்பதிவு.
ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்த, உஸ்மானாபாத் தொகுதி எம்.பி ரவீந்திர கெய்க்வாட், பிசினஸ் வகுப்பில் இருக்கை ஒதுக்காமல் எக்னாமிக் வகுப்பில் இருக்கை ஒதுக்கியது குறித்து ஏர்இந்திய துணை பொது மேலாளர் சுகுமாரனிடம் வாக்குவாதம் செய்தார். இது முற்றியதில், தமது காலணியால் அவர் சுகுமாரனை தாக்கினார். இதுகுறித்து சுகுமாரன் மற்றும் விமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் ரவீந்திர கெய்க்வாட் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெய்க்வாட், தம்மை இழிவாக பேசியதால் சுகுமாரனை காலணியால் 25 முறை அடித்ததாக கூறினார். மக்களவை சபாநாயகர், விமானத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை