Header Ads

  • BREAKING



    லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா பட வெளியீட்டில் மீண்டும் சிக்கல்?

    தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படம் தற்போது "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி, "மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜீவா நடிப்பில் வெளிவந்த "சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவாகரம் குறித்து போத்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    'மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன்தான். தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக் காவல்துறையையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம் தான் 'மொட்ட சிவா கெட்ட சிவா' .

    அந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது. எனவேதான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்பட வோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

    மார்ச் 10 அன்று படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இந்தப் படத்துக்கான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மீண்டும் சொல்கிறேன் 'மொட்ட சிவா கெட்ட சிவா 'படத்துக்கான தடை நீக்கப்படவில்லை.

    விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் படம் வெளியீடு தொடர்பான செய்திகளை நம்பவேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி, டாக்டர் செல்வம் மீது புகார் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad