Header Ads

  • BREAKING



    வெளிவந்தது பவர்பாண்டி டிரைலர்.

    தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள பவர் பாண்டி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளிவந்துள்ளது.

    இளம் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், என பல துறைகளில் அவதாரமெடுத்த தனுஷ் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. ரேவதி, திவ்யதர்ஷினி, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    60 வயதுடைய ராஜ்கிரண் வாழ்கையில் எழும் காதல், பாசம், கோபம் போன்றவற்றை கதைக்களமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். டிரைலரின் முடிவில் ‘இனிமேல் தான் ஆட்டமே இருக்கு’ எனும் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad