கோரிக்கை வைத்த ரசிகை: ஷாக் கொடுத்த மோகன்லால்.
கேன்சர் நோயாளியான தனது ரசிகையின் வீட்டுக்குச் சென்று மோகன்லால் கொடுத்த இன்ப அதிர்ச்சியால், அவர் திக்குமுக்காடி போனார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுபத்தரம்மா. வயது 83. மோகன்லாலில் தீவிர ரசிகையான இவர், கடந்த 17 வருடங்களாக கேன்சருக்கு சிகிச்சைப் பெற்றுவருகிறார். கேன்சர் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன் பேசிய வீடியோ ஒன்று பரபரப்பைக் கிளப்பியது.
அந்த வீடியோவில், ’ஹாய் மோகன்லால். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னைப் போன்ற பல வயதானவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கும் உங்களை அதிகம் பிடிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள உங்கள் வீட்டுக்கு வரும்போது, எங்களையும் வந்து பாத்தால் மகிழ்ச்சி அடைவோம்’ என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய இந்த வீடியோ, மோகன்லால் பார்வைக்குச் சமீபத்தில் சென்றது.
உணர்ச்சிவசப்பட்ட மோகன்லால், ’வில்லன்’ படப்பிடிப்பில் இருந்து உடனடியாக சுபத்ரம்மாவைப் பார்க்கச் சென்றார். அங்கு அவரைச் சந்தித்துப் பேசிய அவர், ஆறுதல் கூறினார். அங்கிருந்த கேன்சர் பாதிப்புக்குள்ளானவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தங்களின் விருப்பமான ஹீரோவை சந்தித்துப் பேசியதை அடுத்து சுபத்தரம்மா உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோவை மோகன்லால் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை