அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயில வருபவர்களுக்கு கிரீன்கார்டு.
அமெரிக்காவில் உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, நிரந்தரமாக தங்க வகைசெய்யும் கிரீன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க – இந்திய நட்புறவு மற்றும் வணிக கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வடக்கு கரோலினா மாகாண செனட்டர் தாமஸ் டில்லிஸ் (Thomas Tillis) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது, உயர்கல்விக்காக அமெரிக்கா வரும் அயல்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியர்களாக இருந்தாலும், சீனர்களாக இருந்தாலும் அவர்கள் நிரந்தரமாக தங்கும் வகையில் கிரீன் கார்டு அளிக்கப்படும் என்றார். மேலும், அவர்கள் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் தாமஸ் டில்லிஸ் கூறினார். கல்வியில் திறமையானவர்கள் இல்லையெனில் அமெரிக்காவின் வளர்ச்சி தடைபடும் என்பதால், வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையாளர்களை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை