Header Ads

  • BREAKING



    கடலில் இறங்கி போராடிய புதுவை மீனவர்கள்.

    தமிழக மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்யக் கோரி, புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு காரணமான இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், மீனவர்களின் பாரம்பரிய உரிமையான கச்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தியும், புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும், அவர்கள் கருப்புக் கொடி ஏந்தி இலங்கை, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி கடலில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad