Header Ads

  • BREAKING



    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.

    சென்னை: சென்னையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில்,ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால்,அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ பொதுமக்களோ சுவர் விளம்பரங்களோ,சுவரொட்டியோ ஒட்டக்கூடாது.அனுமதி பெறாமல் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

    அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு விளம்பரங்கள் அகற்றப்படுவதோடு,வீதிமீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது இந்திய தண்டணை சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 3 பறக்கும் படைகளும்,3 நிலையான கண்காணிப்புக் குழுக்களும்,2 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுளளது.

    மேலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வாகன அனுமதி,பிரச்சார அனுமதி,தேர்தல் அலுவலகத்திற்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் சென்னை மாநகராட்சி,மண்டலம்-4 அலுவலக வளாகத்தில் அமையவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad