Header Ads

  • BREAKING



    இந்தியாவில் விமான நிறுவனம் துவங்குகிறது கத்தார் ஏர்வேஸ்.

    இந்தியாவில் விமான நிறுவனம் துவங்கி பயணிகளுக்கான விமான சேவை வழங்க கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய விமானத்துறையில் 49 விழுக்காடு மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்கிற விதியை கடந்த ஆண்டு மத்திய அரசு தளர்த்தியது. இந்த நிலையில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை துவக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கத்தார் ஏர்வேஸ் துவங்கும் நிறுவனம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு கத்தார் ஏர்வேஸ் விண்ணப்பம் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் துவங்க இருக்கும் விமான நிறுவனத்திற்காக கத்தார் ஏர்வேஸ் 100 பயணிகள் விமானங்களையும் வாங்க உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad