Header Ads

  • BREAKING



    தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்கள்-வைகோ கண்டனம்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்கள் எழுதப்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்கள் எழுதப்படுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அவதியுற்றுவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டத்தால் அகற்றப்பட்ட இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி நடைபெறுவதாகவும் இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என உண்மைக்குப் புறம்பான வாதம் முன்வைக்கப்படுவதாகவும் கூறியுள்ள அவர், ஒரே மொழி ஆதிக்கத்தால் பல நாடுகள் சின்னஞ்சிறு தனித்தனி நாடுகளாக பிரிந்துவிட்டதாகவும் மத்திய அரசு இந்தப் போக்கை கைவிடாவிட்டால் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad