Header Ads

  • BREAKING



    நாட்டைவிட்டு வெளியேறு: இந்திய பெண்ணுக்கு அமெரிக்கர் மிரட்டல்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை, அமெரிக்கர் ஒருவ‌ர் நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    நியூயார்க்கில் ரயில் பயணித்த இந்திய வம்சாவளி பெண்ணான ஏக்தா தேசாய் என்பவரை, அதே ரயிலில் பயணித்த அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் ஒருவர், இந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறும், இந்தியாவுக்குத் திரும்புமாறும் மிரட்டினார். மிகவும் கோபத்துடன் சத்தம் போட்ட அந்த நபரின் செய்கையை, அந்தப் பெண்ணே தனது செல்போனில் படம் பிடித்தார். கடந்த 23ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளம், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டு, அமெரிக்கரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்ரீவாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய பொறியாளர், கன்சாஸ் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad