லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு புக்கிங் முகவர்கள் ஆதரவு.
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக 27ஆம் தேதி முதல் லாரிகளில் பொருட்கள் முன்பதிவு நிறுத்தப்படும் புக்கிங் முகவர்கள் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்துக்கு லாரிகளில் பொருட்கள் முன் பதிவு செய்யும் முகவர்கள் சம்மேளனம், ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி லாரிகளில் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படவுள்ள பொருட்களுக்கு 27ஆம் தேதி முதலும், தமிழக அளவில் 29ஆம் தேதி முதலும் பொருட்களை முன்பதிவு செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை