Header Ads

  • BREAKING



    கூவத்தூர் ஃபார்முலா: ஆதரவு எம்ல்ஏக்களை விடுதியில் தங்க வைத்தது பா.ஜ.க.

    மணிப்பூர் சட்டப்பேரவையில் வரும் 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், 28 இடங்களை வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், 21 இடங்களை வென்ற பா.ஜ.க. ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைத்தது. இருந்தபோதும், வரும் 22-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் தலைநகர் இம்பாலில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்களை கவுகாத்தி அழைத்துச் சென்ற பா.ஜ.க. அங்கு அவர்களை ஹோட்டலில் தங்க வைத்துள்ளது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும் என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad