Header Ads

  • BREAKING



    குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் பணபலம் பெற்றவர்கள் எப்படி மருத்துவ கல்லூரிகளில் சேர முடிகிறது? – சென்னை உயர்நீதிமன்றம்.

    குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும், பணபலம் பெற்றவர்கள் எப்படி வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
    இந்தியாவில் பிளஸ் 2 முடித்து, வெஸ்ட் இண்டீஸில் மருத்துவ படிப்பை முடித்த தாமரை செல்வன், தனக்கு தற்காலிக பதிவு சான்று தர தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள், வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்வது அரசுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். அரசு பணத்தில் படித்துவிட்டு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை இந்தியாவில் பணியாற்றுவதை ஏன் கட்டாயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு ஏப்ரல் 10க்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad