கருப்புப் பணத்திற்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.
சட்டவிரோத பணப் பதுக்கல் விவரங்கள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும் என்பதால், கருப்புப் பணம் வைத்திருப்போர் மார்ச் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் தாமாக முன்வந்து தெரிவித்தால் தண்டனையில் இருந்து தப்பலாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
பிரதமர் கிரிஷி கல்யாண் யோஜனா என்ற சிறப்பு திட்டத்தின்கீழ், கருப்புப் பணத்தை தாமான முன்வந்து தெரிவிக்க மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி இதன் காலக்கெடு முடியவுள்ள நிலையில், கருப்புப் பணத்தை இதுவரை தெரிவிக்காதவர்களுக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக கூறியுள்ள வருமான வரித் துறை, கருப்புப் பணத்தை தெரிவிக்காதவர்கள் ஏப்ரல் மாதம் முதல் வருந்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை