Header Ads

  • BREAKING



    அமராவதியில் ஆகஸ்ட் முதல் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகம் செயல்படும்.

    ஆந்திர மாநிலம் அமராவதியில் உருவாகி வரும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்யநாராயணன் கூறினார்.
    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    அமராவதியில் கட்டப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் மாதிரி கட்டட வடிவமைப்பை (மாஸ்டர் பிளான்) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்து பார்வையிட்டார்.
    அமராவதி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அமெரிக்க, பிரிட்டன், சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் செயல்பட உள்ளது. மாணவர்களுக்கு சர்வதேச தரமிக்க கல்வி வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்கு ஆராய்ச்சி வசதிகளுடன் மரபுசாரா எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்க உள்ளோம்.
    பொறியியல் ஆராய்ச்சி படிப்புகளுடன் மருத்துவம், வணிக மேலாண்மை, சட்டம், கலை, அறிவியல் படிப்புகளையும் இங்கு தொடங்க உள்ளோம்.
    உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க உதவும் வகையில், 'சிருஷ்டி' என்ற தொழில் சிறப்புப் பயிற்சி மையமும் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad