Header Ads

  • BREAKING



    பீகாரில் ஒட்டப்பட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க சுவரொட்டிகள்.

    பீகார் மாநிலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் வைத்திருந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
    ரோடஸ் ((Rohtas)) மாவட்டம் சிக்ரௌலி பிக்கா ((Sikrauli Bihga)) கிராமத்தில் மின்கம்பங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த இயக்கத்தின் முத்திரையும், முகமூடி அணிந்த தீவிரவாதிகளின் படங்களும் அதில் இருந்தன. இதையறிந்த நௌட்டா ((Nauhatta)) போலீசார் அந்த சுவரொட்டிகளைக் கைப்பற்றி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவற்றை ஒட்டியவர்கள் யார் என்பது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பீகாரின் பிற இடங்களிலும் காவல் நிலையங்களுக்கும், இந்த சுவரொட்டி விவகாரம் கொண்டு செல்லப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad