Header Ads

  • BREAKING



    ஸ்காட்லாந்து கோரிக்கை: தெரசா மே நிராகரிப்பு.

    ஒருங்கிணைந்த பிரிட்டனிலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் கோரிக்கையை தெரசா மே நிராகரித்தார்.
    ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறினாலும், ஸ்காட்லாந்து அந்த அமைப்பில் தொடர வேண்டும் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் கூறி வருகிறார். பிரெக்ஸிட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், ஸ்காட்லாந்துப் பகுதியின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரிவினை தொடர்பாக மீண்டும் பொது வாகெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். ஆனால் அந்தக் கோரிக்கையை தெரசா மே திட்டவட்டமாக நிராகரித்தார்.
    "பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் பிரெக்ஸிட் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிரிவினைவாதிகள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்' என்றார் தெரசா மே.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad