கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது – சித்தராமய்யா கைவிரிப்பு
கர்நாடக மாநிலத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார். உலக தண்ணீர் தினத்தையொட்டி பெங்களூரு விதான்சவுதாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,போதிய மழை இல்லாமல் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் வறண்டு உள்ளன என்றார். இப்போது உள்ள சூழ்நிலையில் குடிநீருக்கு கூட அணைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக கூறிய அவர், குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை