Header Ads

  • BREAKING



    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
    வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரியும், கூடுதல் வறட்சி நிவாரணம் கோரியும் டெல்லியில் 17-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, சென்னை பாரிமுனையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வர முயசித்தபோது போலீசார் தடுப்பரண்களை வைத்து அவர்களை தடுத்தனர். மாணவர்கள் தடுப்புக்களை தாண்டிக் குதித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    போலீஸார் வெளியே விட மறுத்ததால், பதாகைகளை ஏந்திக் கொண்டு மெட்ரோ ரயில் சுற்றுச் சுவர் மீது ஏறி, ஆபத்தான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உணவுக்குத் தேவையான அரிசியை விளைவித்துத் தரும் விவசாயிகளுக்காகபோராட வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்துக்கு வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    பாரிமுனை பூக்கடை காவல் துணை ஆணையர் சஷாந்த் சாய் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். போக்குவரத்து பாதிக்காதபடி சாலையில் அமர்ந்து போராட காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, குறளக சந்திப்பு சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad