பரதநாட்டியத்தை, பரிதாப நாட்டியமாய் அரங்கேற்றிய ரஜினி மகள் ஐஸ்வர்யா.
பரதநாட்டியம் என்ற பெயரில் ஐஸ்வர்யா தனுஷ் ஐக்கிய நாடுகள் சபையில் பரிதாப நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளதாக பிரபல பரதநாட்டிய கலைஞர் அனிதா ரத்னம் தெரிவித்துள்ளார். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஐஸ்வர்யா தனுஷ் பரத நாட்டியம் ஆடினார். ஆனால் அவரது நடனம் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் அரங்கேற்றிய பரதநாட்டியத்தை கற்றுக் கொடுத்தது பிரபல பரதநாட்டிய கலைஞர் அனிதா ரத்னம் என்று தகவல் வெளியானது. இதனால் பதறிப்போன அனிதா ரத்னம், தான் ஒரு முறை கூட ஐஸ்வர்யா தனுஷை சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பரதநாட்டியம் என்ற பெயரில் பரிதாப நாட்டியத்தை ஐஸ்வர்யா ஐநாவில் அரங்கேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பரதக்கலையை சர்வதேச அளவில் கேலிக்கு உள்ளாக்கும் வகையிலான ஐஸ்வர்யா போன்ற நபர்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் அனிதா ரத்னம் கூறியுள்ளார்.
https://youtu.be/4fWV7cFPOfA
கருத்துகள் இல்லை