Header Ads

  • BREAKING



    போர் குற்றம் தொடர்பான விசாரணையில் இலங்கை அரசு தோல்வி-செயித் ராத் அல் ஹுசைன்.

    போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய அமர்வின் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றார். போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என்ற அவர், இலங்கை போர்க் குற்றம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த சர்வதேச நீதிபதிகள் உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதாக கூறினார். இதனிடையே போர் குற்ற விசாரணையை நடத்த இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad