Header Ads

  • BREAKING



    ஈரானியர்கள் என நினைத்து இந்தியரை கொன்றேன் – புரிண்டன்.

    அமெரிக்காவின் கன்சாசில் ஈரானியர்கள் என நினைத்து இந்தியர்களை சுட்டதாக துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கன்சாஸ் மகாணத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மதுபான விடுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் கிளிண்டன் என்ற பாரில் பணியாற்றும் ஊழியர் அளித்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய புரின்டன் கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்தியரை சுட்டுக் கொன்றுவிட்டு கிளின்டன் பாரில் மது அருந்திய போது, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த இருவரை சுட்டுக்கொன்றதாக தன்னிடம் ஆதம் புரிண்டன் தெரிவித்தாக பார் ஊழியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தாம் தகவல் அளித்ததைத்தொடரந்து அவர்கள் ஆதம் புரிண்டனை சுற்றி வளைத்தாக அவர் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad