Header Ads

  • BREAKING



    உ.பி.யில் பாஜக, பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி உள்ளது.

    நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. உத்தரப்பிரதேசத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகிக்கத் தொடங்கியது. இதையடுத்து அந்த கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 10.30 மணி நிலவரப்படி பாஜக 296 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கூட்டணி 82 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் காரணமாக பாஜக ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகியிருக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 65 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி 27 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இதனால் இங்கு காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி இருக்கிறது. முழுமுடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad