Header Ads

  • BREAKING



    சித்தி முறைகொண்ட பெண் மீது தீரா காதல், கட்டாய திருமணம் செய்யமுயன்ற இளைஞர் கைது.

    பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அவரது மகன் முறைகொண்ட விக்னேஸ்வரன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ளாத மாணவி, பெற்றோரிடம் புகார் கூறியதால், விக்னேஸ்வரனை கண்டித்து வைத்துள்ளனர். ஆனாலும், மாணவி மீதான காதலை கைவிட மறுத்த விக்னேஸ்வரன், சித்தி முறையென்றும் பாராமல் அவரை கட்டாய திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இன்று வழக்கம்போல் கல்லூரி செல்வதற்கென புதுப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்ற மாணவியை, தனது நண்பர்கள் காமராஜ், பிரவீண், குமார் ஆகியோருடன் இணைந்து காரில் கடத்தியுள்ளார் விக்னேஸ்வரன். கடத்தும்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்ட ஊர்மக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்துவதற்காக அதன் ஓட்டுநர் கார் கண்ணாடியை இறக்கியுள்ளார். அப்போது, காரில் இருந்த கல்லூரி மாணவி கூச்சல் போடவே, சுங்கச்சாவடி ஊழியர்களும் போலீஸாரும் காரை மடக்கிப் பிடித்து, மாணவியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். விசாரணையில், மாணவியை மேல்மருவத்தூர் அருகே ஒரு கோவிலில் கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, விக்னேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad