Header Ads

  • BREAKING



    மின்சக்தியால் இயங்கும் புதிய ரக தெஸ்லா கார்கள் அறிமுகம்.

    மின்சக்தியால் இயங்கும் புதிய ரக கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருமென அமெரிக்காவின் தெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள தெஸ்லா -3 என்ற புதிய ரக காரின் காட்சிகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ள தெஸ்லா நிறுவன தலைமை செயல் அலுவலர் எலன் முஸ்க், ஜூலை மாதம் முதல் அமெரிக்காவில் தெஸ்லா- 3 ரக கார்களில் விற்பனை தொடங்கும் என்று கூறியுள்ளார். விரைவில் இந்தியாவிலும் விற்பனை வர உள்ள இந்த கார்களில் விலை 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் முதல் 48 ஆயிரம் டாலர்கள் வரை இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 346 கிலோ மீட்டர் தூரம் நிற்காமல் செல்லக் கூடிய இந்த கார், வெறும் ஆறே வினாடிகளில் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்கும் திறன் கொண்டது என்றும் 5 பேர் அமர்ந்து பயணிக்கும் வசதி கொண்டது என்றும் எலன்முஸ்க் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad