Header Ads

  • BREAKING



    பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா வருவதற்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு.

    ஒடிசா மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் நிலையம் ஒன்றில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதி ஒடிசாவில் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாவோயிஸ்டுகள், ராயகடா மாவட்டத்தில் உள்ள டோய்கலு (Doikalu) ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து, அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் என்ஜினையும் சேதப்படுத்தினர். பின்னர் கையால் எழுதப்பட்ட போஸ்டர் ஒன்றையும் அவர்கள் ரயில் நிலைய சுவரில் ஒட்டிச் சென்றனர். அதில், பிரதமர் மோடி, முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசுகளின் கொள்கைகளை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டோய்கலு வழியாக செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad