Header Ads

  • BREAKING



    தாதா ஸ்ரீதர் தொடர்பால் கொலையை மறைத்த பெண் பரபரப்பு வாக்குமூலம்.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெங்கடாசலம். இவரது மனைவி ராஜலெட்சுமி மற்றும் அவரது மகன் பொறியாளர் எல்லப்பன் ஆகியோரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் வெங்கடாசலம் வீட்டில் வாடகைக்கு இருந்த தேன்மொழி, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பன், சங்கர், கோபி, சரவணன் உள்ளிட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொன்று புதைக்கப்பட்ட பொறியாளர் எல்லப்பனின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது. வெங்கடாசலத்துக்கு சொந்தமான நிலங்களையும், வீட்டையும், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த தேன்மொழி அதனை காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் துணையுடன் 20 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.ஆனால் ஸ்ரீதர் தனபாலோ சொத்து விற்ற பணத்தை கொடுப்பது போல கொடுத்து தேன்மொழியிடம் இருந்து மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டதாக சுட்டிக்காட்டுகிறது காவல்துறை.இந்த நிலையில் வெங்கடாசலத்தின் பெயரில் பஞ்சாப் நேசனல் வங்கி கிளையில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை காஞ்சிபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜி.வி.மதியழகன் என்பவர் தேன்மொழிக்கு எடுத்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேன்மொழி காவல் துறையில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், காங்கிரஸ் பிரமுகர் ஜி.வி மதியழகன், அவரது செல்வாக்கை பயன்படுத்தி வங்கியில் இருந்து 1 கோடி ரூபாய் பணத்தை எடுக்க உதவியதாகவும்,65 லட்சம் ரூபாயை அவரே வைத்துக்கொண்டு 35 லட்சம் ரூபாயை மட்டுமே தன்னிடம் தந்ததாகவும், அந்த விபரம் அறிந்த பிற அரசியல்கட்சியினர் தன்னை மிரட்டி மீதி பணத்தையும் பறித்துக்கொண்டதாகவும் அவர்கள் யார்? யார் ?என்ற முழுவிவரத்தையும் தேன்மொழி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தேன் மொழி தெரிவித்த தகவல்கள் உண்மையா என்று ஜி.வி மதியழகனை அழைத்து விசாரித்துள்ள காவல்துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அரசியல் பிரமுகர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.தாதா ஸ்ரீதர் தனபால், யார்யாருடன் தொடர்பு வைத்துக்கொண்டு நிலங்களை வாங்கி விற்கிறான் என்று விசாரித்த போதுதான், தேன்மொழியுடனான ரியல் எஸ்டேட் தொடர்பும் மற்றும் இரட்டை கொலை ரகசியமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.இன்னும் எத்தனை சொத்துகளில் ஸ்ரீதர் தனபால் இது போன்ற கைவரிசையை காட்டியுள்ளான் என்பதை கண்டறிய குறித்து அவனிடம் சொத்து வாங்கியவர்கள், மற்றும் சொத்து விற்றவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad