Header Ads

  • BREAKING



    நிலையின்றி உயர்ந்து வரும் பால், பெட்ரோல் விலை ஏழை, நடுத்தர மக்கள் மத்திய மாநில அரசுகள் மீது அதிருப்தி.

    நிலையான விலையின்றி அடிக்கடி பால் விலையும், பெட்ரோல் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்திய மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 15 வரை உயர்ந்துள்ளது. அதே போல் பால் விலை ரூ. 10 வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போதுள்ள சூழலில் இருசக்கர வாகனம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை உள்ளது. 

    பல தனியார் நிறுவனங்களில் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே வேலை எனவும் கூறி வருவதால் ஏழைகளாக இருந்தாலும் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். 

    இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன வாடகை செலவு கூடுதலாவதால் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் விலை உயரும் அபாயம் உள்ளது. 

    மேலும் ஆட்டோக்களில் பெட்ரோல் விலை கூடும்போதெல்லாம் கட்டணத்தை உயர்த்தும் ஓட்டுநர்கள், பெட்ரோல் விலை குறைந்தால் இவர்களது விலையை குறைப்பதில்லை. இதுபோல் பல வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
    இதே போல் மாவட்டத்தில் பெரும்பான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தனியார் பாக்கெட் பால் பாக்கெட்டுகளை வாங்குகின்றனர். பால் விலை உயர்வால் அவர்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ரூ.150 வரை உயருகிறது. 

    இதுபோல் மாதாந்திர பட்ஜெட்டில் பெட்ரோல், பால் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைக்காக கூடுதல் செலவு உருவாகும் நிலையில் அவர்களுக்கு வரும் வருவாயில் எவ்வித உயர்வும் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 

    எனவே இதுகுறித்து மத்திய மாநில, அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad