Header Ads

  • BREAKING



    தெலுங்கானாவில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.

    தெலுங்கானா அருகில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவிழந்த நிலையில் காணப்பட்டதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ராமநாதபுரம் திருவாடானையில் 60 மி.மீ., கோவை, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 40 மி.மீ., கோவை மாவட்டம் பீளமேடு, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதுதவிர, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, கோவை மாவட்டம் வால்பாறை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில்õ 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: 

    குமரிக் கடல் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையானது வலுவிழந்து காற்றின் மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது. லட்சத்தீவின் அருகே நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, தெலுங்கானா மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad