திருச்சி: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கொலை.
திருச்சி லால்குடி அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, மருத்துவமனையின் உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேட்டுத்தெருவைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் வினோத் என்பவருக்கும், வீட்டு வாசலில் தண்ணீர் ஊற்றியது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தர்மர் தாக்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தர்மரை, அதேபகுதியை சேர்ந்த மருது என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினார். தப்பிச் சென்ற மருது என்பவரை லால்குடி காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே தர்மரை தாக்கிய வினோத்தின் தூண்டுதலால் தான், மருது கொலை செய்திருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை