தாய்-மகளை பலாத்காரம் செய்து தாக்கிய உ.பி. அமைச்சர் தலைமறைவு,அவரைக் கைது செய்ய போலீசார் உஷார் நிலை.
உத்தரப் பிரதேச அமைச்சர் காயத்ரி பிரஜாபதி தலைமறைவாக இருப்பதால், அவரைக் கைது செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் வெளிநாடு தப்பிச்செல்ல முடியாதபடி விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தமது மகளை மானபங்கப்படுத்த முயற்சித்து கடுமையாக தாக்கியதாகவும், பெண் ஒருவர் புகார் அளித்ததையடுத்து, பிரஜாபதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் தலைமறைவான பிரஜாபதி 5 நாட்களாக போலீசாரிடம் சரண் அடையவில்லை.உத்தரப்பிரதேச தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் பிரஜாபதி வேறெங்கும் தப்பிச்செல்லாதவாறு வலைவிரித்துள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை