லண்டன் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு.
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து புதனன்று இரவு முதல் ஆறு வீடுகளில் சோதனை நடத்திய லண்டன் காவல்துறை சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்திருப்பதாக பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் உயரதிகாரி மார்க் ராவ்லி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஏழு பேரில் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை