Header Ads

  • BREAKING



    வாயில் பாம்புக் கறியுடன் விவசாயிகள் போராட்டம்.

    டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 16-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது வாயில் பாம்புக் கறியை வைத்து நூதன முறையில் அவர்கள் போராடினர்.

    வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகைளை வலியுறுத்தி இன்றும் 16-ஆவது நாளாக தங்களது போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர். மண்டை ஓட்டை வைத்து போராட்டம், எலிக்கறி சாப்பிடும் போராட்டம் என பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்த விவசாயிகள் இன்று வாயில் பாம்புக் கறியை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகைளை முன் வைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    போராட்டதில் பங்கேற்றுள்ள விவசாயி ஒருவர் கூறும்போது, மத்திய அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. பிரதமர் நினைத்தால் ஒரே கையெழுத்தில் கடன் தள்ளுபடி செய்யலாம் என கூறினார். ஆனால் பிரதமர் மோடி இதனை செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad