மகாபாரதத்தை கிண்டல் செய்ததாக நடிகர் கமலஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு.
நடிகர் கமல் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் புகார் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்ததும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். கடந்த 12-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமலஹாசன் அளித்த பேட்டியின் போது, மஹாபாரதத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடிகர் கமலஹாசன் பேசியதாகக் கூறி, நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், கமலஹாசனுக்கு எதிராக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று பிற்பகலில் விசாரித்த நீதிபதி, இதுசம்பந்தமாக பழவூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், உத்தரவு கிடைத்ததும் கமலுக்கு எதிரான விசாரணை தொடங்கும் என்று பழவூர் போலீசார் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை