Header Ads

  • BREAKING



    மணல் கடத்தலை தடுத்த பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்.

    திருச்சி மணப்பாறை அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை, மடக்கிப் பிடிக்க முயன்ற பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக, 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கரையாம்பட்டி அருகே அரியாற்றில் நேற்று நள்ளிரவில் மணற்கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மணற்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை மறித்துப் பிடிக்க முயன்றபோது, மணற்கடத்தல் கும்பல் பொதுமக்களை மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் அந்த கும்பல் அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் கடத்தல் கும்பலில் 4 பேரை விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரியாற்றில் மணல் அள்ள தோண்டப்பட்ட குழிகளை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad