Header Ads

  • சற்று முன்



    ரூ. 1,000 கோடி மதிப்புள்ள பத்திரங்களை விற்கும் தமிழக அரசு.

    ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி நடத்தும் இந்த ஏலம், வரும் 11-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில், போட்டி ஏல கேட்புகள் காலை பத்தரை மணியிலிருந்து 12 மணிக்குள்ளும், போட்டியற்ற ஏல கேட்புகள் பத்தரை மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad