குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ10,000 அபராதம்.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது.புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் 500 ரூபாயும், உரிமம் இன்றி ஓட்டினால் 5000 ரூபாயும், அதிவேகமாக கார் ஓட்டினால் 2000 ரூபாயும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். கடந்த, 1989ம் ஆண்டு இந்திய மோட்டார் வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டது.அதன் பிறகு,28 ஆண்டுகளுக்கு பின்,திங்கட் கிழமை அன்று வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது.
கருத்துகள் இல்லை