Header Ads

  • BREAKING



    ஏர்டெல் சிம்கார்டை முடக்கி ஒரே நாளில் 10 லட்சம் அபேஸ்.

    சென்னையில் ஏர்டெல் சிம்கார்டுகளை முடக்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் திருடப்பட்டதால் ஏர்டெல் அலுவலகத்துக்கு சென்னை பெரு நகர காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை பெரு நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவினர் தான் ஏர்டெல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
    வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டுகளின் விவரங்களை திருடும் மோசடி கும்பல் ஒன்று சம்பந்தபட்ட வாடிக்கையாளர் பெயரில் போலிக்கடிதம் கொடுத்து அந்த சிம்கார்டு நம்பரை செயல் இழக்க செய்கின்றனர். பின்னர் வங்கியில் புதிய சிம்கார்டு நம்பரை கொடுக்கும் மோசடி கும்பல் பணம் திருடும் போது வங்கியில் இருந்து செல்லும் ஓ.டி.பியை தங்கள் கையில் இருக்கும் சிம்கார்டுக்கு வரவைக்கிறது.
    அடுத்த சில நொடிகளில் அவர்களது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபேஸ் செய்து விடுவதாக சுட்டிக்காட்டுகிறது காவல்துறை. அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏர்டெல் சிம்கார்டுகளை முடக்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 1 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் களவாடப்பட்டிருப்பதாக
    அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது காவல்துறை.
    வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் திருவான்மியூரை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், சுந்தர் என்ப்வர் வங்கி கணக்கில் இருந்து 94ஆயிரம் ரூபாயும், வழக்கறிஞர் ராஜலெட்சுமியிடம் இருந்து 58 ஆயிரம் ரூபாயும், குமுதா என்பவரிடம் இருந்து 92 ஆயிரம் ரூபாயும், முருகன் என்ற வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாயும் களவாடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பணத்தை பறிகொடுத்தவர்கள் தங்கள்
    செல்போனை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
    முழுக்க முழுக்க ஏர்டெல் நிறுவனத்தின் மெத்தனமான நடவடிக்கையால் இந்த பணத்திருட்டு நடப்பதாக குற்றஞ்சாட்டும் சென்னை காவல்துறையினர் ஏர்டெல் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் பால்ராஜ் என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
    வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் யாரோ ஒருவர் கடிதம் கொடுத்தார் என்பதற்காக எப்படி அந்த நம்பரை முடக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் காவல்துறை, இந்த அலட்சியமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர் நேரில் வந்து சிம்கார்டு எண்ணை குறிப்பிட்டு மாற்ற கோரி விண்ணப்பம் தந்தால் மட்டுமே மாற்றிக்கொடுக்க வேண்டும் என்றும் ஏர்டெல்லுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மோசடி ஆசாமிகள் ஏர்டெல் நெட்வோர்க் சேவையை எளிதில் முடக்கி சிம்கார்டுகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்துவதால் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி விடும் என்கிறது காவல்துறை.
    ஆனால் காவல்துறையில் இருந்து எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை என்று மறுத்துள்ள ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் சிம்கார்டுகளை அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதால் பணம் பறிகொடுத்தவர்களில் பலர் தங்களது நிறுவன சிம்கார்டு முடக்கப்பட்டதாக புகார் கூறி இருக்காலாம் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளது.
    அதே போல் கோடம்பாக்கம் கங்கா நகரில் பஞ்சாப் நேசனல் வங்கி ஏடிஎம் மில் ஸ்கிம்மர் கருவி பொறுத்தி 50 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் ஏடிஅம் கார்டு விவரங்கள் திருடப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் இருந்து 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் களவாடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    இதையடுத்து அந்த ஏடிஎம் தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எக்காரணத்தை கொண்டும் தங்களது கார்டு விவரங்களை செல்போனில் யார் கேட்டாலும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கும் காவல்துறை பணம் திருடப்பட்ட 12 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad