ஹரியானாவின் பக்ராநங்கல் கால்வாயில் இருந்து ஒரே நேரத்தில் 12 மனித உடல்கள் கண்டெடுப்பு.
மாநிலத்தில் ஜின்ட் மாவட்டம் (Jind) நர்வனா (Narwana) பகுதியில் பக்ராநங்கல் அணையின் கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்த வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பொக்லைன் வாகனங்கள் மூலம் சேறும், மண் திட்டுகளும் அள்ளப்பட்டது. அப்போது சேற்று மண்ணோடு ஒரு மனித உடலும் வந்தது. அதே இடத்தில் அடுத்தடுத்து 12 உடல்கள் வரிசையாக சேற்றிலிருந்து எடுக்கப்பட்டது.தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் பஞ்சாப் மாநில எல்லை என்பதால், அம்மாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். கண்டெடுக்கப்பட்ட 12 உடல்களில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடையது என்று பஞ்சாப் போலீசார் உறுதி செய்துள்ளனர். பிற உடல்களும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மனித உடல்கள் சேற்றில் புதைந்து கிடக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை