Header Ads

  • BREAKING



    தினகரன் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி போலீசார் சென்னையில் 12 பேருக்கு சம்மன்.


    தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு 12 பேருக்கு சம்மன் கொடுக்க டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தைப் பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்ட தினகரனிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னை ஆதம்பாக்கத்திற்கு வந்த டெல்லி போலீசார், மன்னார்குடியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் விரிவான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொளப்பாக்கத்திற்கு சென்ற போலீஸார், வோடபோன் மேலாளராகப் பணியாற்றுபவர் என்று சொல்லப்படும் ஃபிலிப்ஸ் டேனியலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது தாயாரிடம் சம்மன் அளித்தனர். இதையடுத்து, திருவேற்காடு பஜனைகோவில் தெருவுக்கு சென்ற போலீஸார், அங்கு வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்தனர். நேற்று இரவு சௌகார்பேட்டை பகுதிக்கு வந்த டெல்லி போலீசார், மூடப்பட்ட கட்டடம் ஒன்றை ஆய்வு செய்தபின் நரேந்திரன் என்பவர் குறித்த விவரங்களைக் கட்டனர். அங்கிருந்து பெரம்பூர் சென்ற அவர்கள், பதிப்பகம் ஒன்றின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சங்கர் என்பவர் குறித்த விவரங்களைக் கேட்ட பின், வீட்டின் உரிமையாளர் அன்பழகன் என்பவரை விசாரணைக்காக ராஜாஜி பவனுக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad