Header Ads

  • BREAKING



    தனியார் வணிக வளாகத்தில் 13 கடைகளின் பூட்டை உடைத்துக் கொள்ளை.


    சென்னை எழும்பூரில் தனியார் வணிக வளாகத்தில் இருந்த 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
    சென்னை எழும்பூர் அருங்காட்சியம் எதிரே உள்ள பாந்தியன் சாலையில், பிரஷர் ஐலாண்ட் என்ற தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் தரை மற்றும் முதல் தளத்தில் 35 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள், செல்போன் விற்பனை மையம், டெக்ஸ்டைல் உள்ளிட்ட 13 கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கொள்ளை நடந்த தனியார் வணிக வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு சி.சி.டி.வி. கேமரா எதுவும் இல்லாததால், அருகில் உள்ள மற்றொரு வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad