புதுவையில் மே 1 முதல் தலைக்கவசம் கட்டாயம்: டிஜிபி.
மே 1-ஆம் தேதி முதல் புதுவையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சுனில்குமார் கெüதம் எச்சரித்தார்.
ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை செயலர் அருண் தேசாய், டிஜிபி சுனில்குமார் கவுதம் உள்ளிட்டோர் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர், டிஜிபி சுனில்குமார் கவுதம் கூறியதாவது: கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு தலைக்கவசம் அணியாததும் காரணம். எனவே, புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மே 1ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை