Header Ads

  • BREAKING



    பொறியியல் படிப்புக்கு மே 1-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


    பொறியியல் படிப்புக்கு மே 1-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும் நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12.ம் தேதி வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பொறியியல் படிப்புக்களுக்கு மே 1-ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஜுன் 22ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதாகவும், இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய மே31 கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார். ஜுன் 20ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது என்றும், ஜூன் 27-ல் கலந்தாய்வு தொடங்கினாலும், கலந்தாய்வு தேதியானது மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வைப் பொறுத்து மாறுபடும் என்றும் அமைச்சர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad