Header Ads

  • BREAKING



    நிலத்தகராறு: குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய எம்.எல்.ஏ. 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சூர்ய தேவ் சிங் என்பவர் நிலத்தகராறு காரணமாக நிலத்தை காலி செய்ய மறுத்த ஒரு குடும்பத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் இரண்டு குழந்தைகள், ஒரு இளைஞர் குண்டடிப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சூரிய தேவ் சிங்கின் வீட்டுக்கு பாதுகாப்பு தந்த போலீசார் மீது கல்வீசித்தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் காரணமாக தென்டுனி கிராமத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad