Header Ads

  • BREAKING



    பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் 200 ரூபாய் நோட்டுகள்?

    நவீனப் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில்  வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புழக்கத்தில் இருந்த பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகத்தான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

    அதன்பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிவந்த சிறிது நாள்களிலேயே கள்ள நோட்டுகள் வெளிவந்தன. நாடு முழுவதும் பல இடங்களில் புதிய 2000 ரூபாய கள்ள நோட்டுகள் பிடிப்பட்டன. தற்போது, ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் புதிய 200 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் வெளியிட முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும், கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad