20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.
புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். நாட்டில்யே முதன்முறையாக புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கிராமத்தை மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கியதாகவும், அங்கு வைஃபை வசதி நிறுவப்பட்டு, பொதுமக்கள் அனைத்து அரசு சேவைகளையும் கணினி வழியே பெற்று வருவதாகவும் மணிகண்டன் தெரிவித்தார். மேற்கொண்டு 60 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறிய மணிகண்டன், சான்றிதழை பெறவோ, அரசின் நலத்திட்டத்தை பெறவோ குறிப்பிட்ட நாட்கள் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை பதிவு செய்துவிட்டால் அடையாள எண் தரப்பட்டு, அதன் பின்னர் சேவைகளை தடையின்றி பெறலாம் எனவும் கூறினார்.
கருத்துகள் இல்லை